"அம்மா கிளினிக் ஒரு போதும் நகர்புற நலவாழ்வு மையத்திற்கு ஈடாகாது"... மா.சுப்ரமணியன் பரபரப்பு பேச்சு

x

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், அம்மா கிளினிக்குக்கு பதிலாக தற்போது நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை தேவை அதிகம் உள்ள மலைப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அம்மா கிளினிக் ஓராண்டுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டது. சைதாப்பேட்டையில் சுடுகாட்டில் தான் கிளீனிக் அமைக்கப்பட்டது. இந்த கிளினிக்குகளுக்கு 1820 மருத்துவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்புற நலவாழ்வு மையம் 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிகள் என மொத்தம் 708 இடங்களில் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.ஒவ்வொரு மையத்திற்கும் இதற்காக ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என 4 பேர் பணியமர்த்தப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த மையங்களின் கட்டமமைப்புக்காக 708 மையங்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்