தாய் தலையில் அம்மிக்கல் போட்டு கொன்ற மகன்! - காஞ்சிபுரத்தில் பரபரப்பு..

x

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் - நீலா தம்பதியினர். இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் நீலா உறங்கிக் கொண்டிருந்த நிலையில் மனவளர்ச்சிக்கு குன்றிய மகன் பேரருளாளன் வீட்டிலிருந்த அம்மி கல்லை தூக்கி தாய் தலை மீது போட்டு சென்றுவிட்டார்.

இதில் தாய் நீலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த நீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன வளர்ச்சி குன்றிய பேரருளாளனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்