விபத்தில் உயிரிழந்த மருமகள்அதிர்ச்சியில் மாமியாருக்கு ஏற்பட்ட சோகம் - தருமபுரியில் சோக சம்பவம்

x

தருமபுரி மாவட்டம் அரூரில், விபத்தில் உயிரிழந்த மருமகளின் உடலை பார்த்து கதறி அழுத மாமியார் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரூர் பேருந்து நிலையம் அருகே, மண் கொட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் மீது, பருப்பு லோடு ஏற்றி வந்த டாரஸ்ட் லாரி மீது மோதியதில், சித்ரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 2 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு சித்ராவின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சித்ராவின் உடலைப் பார்த்து கதறி அழுத மாமியார் பொன்னிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரே குடும்பத்தில் தொடர்ந்து 2 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்