சிறு வயது உயிர்களை காவு கேட்கும் காய்ச்சல்.. நிரம்பிக்கொண்டே இருக்கும் மருத்துவனைகள் - கேரளாவுக்கு எமனான `கொசு'

x

கேரளாவில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த மாதம் முதல் இருந்து வருகிறது. நாளொன்றுக்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 29 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நேற்று உயிரிழந்த 6 பேரில் 3 பேர் இளைஞர்கள் ஆவர். காய்ச்சல் மற்றும் சிகிச்சைக்காக வருவோர் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் போதிலும், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ், மருத்துவர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முதியவர்கள் மற்றும் சிறார்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்