Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-09-2023) | Morning Headlines | Thanthi TV
பூமி தானாக அழிவதில் இருந்து காக்க சனாதன ஒளி மேலோங்க வேண்டும்..வள்ளலாரின் வரிகளை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..
அரசுப் பணிக்கு தேர்வானவர்கள் மக்கள் சேவை ஒன்றையே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்..அரசாணை வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..
ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு...
தமிழ் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று முடிவெடுக்க கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி என்று எஸ்.பி.வேலுமணி பேட்டி.பாஜக என்ற பெரும் சுமையை இறக்கி வைத்து விட்டோம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு...
வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்..டிசம்பர்12ஆம் தேதி வரை திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு..
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருக்கிறது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று மிலாடி நபி கொண்டாட்டம்..நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து....
நாட்டில் உள்ள ஏழைகளுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்..தன்னுடைய பெயரில் ஒரு வீடு கூட இல்லை என்றும் பேச்சு....
தமிழின படுகொலைக்கு காரணமான இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.....ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது எப்படி.? தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி....
திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் எனக் கூறி, விசாரணையில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்......