காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2023)
- 'மிக்ஜாம்' பேரிடர் பாதிப்புகளை களைய ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பாடுபட்டுக்கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு...நிவாரண பணிகளில் ஈடுபடுவோருக்கு தோள் கொடுத்து உதவ வேண்டும் என, தி.மு.க.வினருக்கு அழைப்பு...
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...புயல் மழை பாதிப்புக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி என, ட்விட்டரில் பதிவு...
- "பொது மக்களின் நலன் கருதி படிப்படியாக மின் விநியோகம்..."சூழலை புரிந்து கொண்டு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்...
- சென்னையில் மின் விநியோகம் சீராகும் போது செல்போன் கோபுரங்கள் முழுமையாக செயல்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி...தற்போது 70 சதவீத செல்போன் கோபுரங்கள் இயங்குவதாகவும் தகவல்..
- சென்னை வேளச்சேரியில், தனியார் கட்டிட கட்டுமானம் சரிந்து விபத்துக்குள்ளான இடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு...15 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணி குறித்து, நள்ளிரவில் நேரில் வந்து விசாரித்தார்...
- மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்கவில்லை என்றும் புகார்...
- மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என, மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர் பாலு வலியுறுத்தல்...தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணமாக 5,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என.மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை...
Next Story