"ஜில் ஜில் கூல் கூல்.."மேலும் குளிர்ந்த கொடைக்கானல்..விடாமல் பெய்த மழை..

x

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கன மழையானது கொட்டி தீர்த்தது,குறிப்பாக அப்சர்வேட்டரி, கலையரங்கம், ஏரிச்சாலை,7ரோடு சந்திப்பு, மூஞ்சிக்கல், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் க‌ன‌ ம‌ழையாக‌வும் மேலும் ஒரு சில‌ இடங்களில் மித‌மான‌ ம‌ழையாக‌வும் பெய்த‌து, மேலும் மழை தொடர்ந்து பெய்து வ‌ருவ‌தால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது,தொடர்ந்து மழை பெய்ததால் க‌ல்லுக்குழி குடியிருப்பு ப‌குதிக்கு செல்லும் சாலையில் ம‌ர‌ம் முறிந்து உய‌ர் அழுத்த‌ மின் க‌ம்பிக‌ளின் மேல் விழுந்த‌தால் இப்ப‌குதியில் மின் விநியோக‌மும் த‌டைப‌ட்டுள்ள‌து,மரத்தினை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் கன மழை தொட‌ர்வ‌தால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்