அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. "தயாராக இருங்க" - மத்திய அரசு அலர்ட்
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பில் இந்தியாவில் யாருக்காவது குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் யாருக்காவது குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டால் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு, குரங்கு அம்மை நோய்க்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Next Story