சிறுமிக்கு காதல் வலை விரித்து பண மோசடி..வேஷம் கலைந்ததால் கருணை கொலை மனு..!

x

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம்.

கையிலே கோரிக்கை மனுவுடன் வீல் சேரில் வந்த ஒரு மாற்றுதிறனாளி, தன்னை தயவு செய்து கருணை கொலை செய்து விடுங்கள் என காவலர்களிடம் கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.நண்பனின் காதலுக்கு உதவ நினைத்ததால், சென்னை விமான நிலைய போலீசாரிடம் பிடிபட்டு சித்ரவதை அனுபவிப்பதாக கண்ணீர் முகத்துடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பார்ப்பதற்கு பரிதாபத்தின் பிறப்பிடம் போல் முகத்தை வைத்திருக்கும் இவர் சந்தோஷ்.ஆம்பூரை சேர்ந்த இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் நடந்த ஒரு விபத்தில் நடக்கமுடியாமல் போயிருக்கிறது. அதற்கு பிறகு வீல் சேரை கால்களாக கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.

"அய்யோ பாவம்" என்று இவரின் பின்னால் இருக்கும் சோககதையை ஏர்போர்ட் போலீசாரிடம் கேட்ட போது தான், இவரின் பித்தலாட்டங்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.ஆம்...கனடாவில் கம்ப்யூட்டர் இன்ஞ்சினியர் என்று கப்சா விட்டு, அப்பாவி பெண்களுக்கு காதல் வலைவிரித்து காசு பணம் கறக்கும் பலே கிள்ளாடி தான் இந்த சந்தோஷ் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், தனது மகளை ஒருவர் ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.மருத்துவம் படிப்பதை லட்சியமாக கொண்ட அந்த மாணவியுடன் கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதளப்பக்கம் மூலம் கனக்டாகி இருக்கிறார் ஒரு நபர்.தனது பெயர் கெல்வின் என்றும், தான் ஒரு கம்பியூட்டர் இன்ஞ்சினியர் என்றும் சொல்லி சிறுமியிடம்சேட்டிங்கை தொடங்கி இருக்கிறார்.

கனடாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தனது பூர்வீகம் மும்பை என்றும் அடுக்கடுக்காக பொய்களை அள்ளி தெளித்திருக்கிறார்.மேலும் வித விதமான பல ஹான்ஸம் போட்டோக்களை அனுப்பி அது தான் என கூறி உள்ளார் அந்த நபர்.இவற்றை எல்லாம் உண்மை என நம்பிய சிறுமியும் உரையாடலை தொடர்ந்ததால், தனது காதல் வலையை விரித்திருக்கிறார்.

i love you....i want to see you...i need you.... என அந்த நபர் வாரி வீசிய ஆசை வசனங்களினால், இளம்பெண்ணும் காதல் வயப்பட்டிருக்கிறார்.சிறுமியின் மருத்துவ கனவை சாதகமாக பயன்படுத்தி, கனடாவில் தனது செலவிலேயே மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி ஆசை காட்டி உள்ளார்.இருவரும் ஒருவருடமாக காதலித்து வந்த நிலையில் அந்த நபர் வீடியோகாலில் முகத்தை காட்ட மறுத்து நேரில் சந்திப்பதாக கூறி வந்திருக்கிறார்.இந்நிலையில் தான் திடீரென ஒரு நாள் இருவரின் காதல் விவகாரமும் வீட்டில் தெரிந்து விட்டதால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய கூடாதென பெற்றோர்கள் கண்டித்து, தனது வங்கி கணக்குகளை முடக்கி விட்டதாக கூறி உள்ளார்.இதனால் தன்னிடம் பணம் இல்லை, வீசா எடுப்பதற்கு மட்டும் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்யுமாறு சிறுமியிடம் கூறி தனது ஏமாற்று வேலை தொடங்கி இருக்கிறார் அந்த நபர்.

கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, கையில் இருந்த ப்ரேஸ்லெட் என தன்னிடம் இருந்த அனைத்தையும், காதலனின் நண்பர் என கூறி வந்த ஒரு நபரிடம் சென்னை ஏர்போட்டில் வைத்துகொடுத்திருக்கிறார் சிறுமி. கொடுத்த நகையில் வீசா தயாராகி விட்டதாகவும், அதை கையில் பெற மேலும் 50 ஆயிரம் வேண்டுமென அடுத்த உருட்டை உருட்டி இருக்கிறார். அதற்கும் சிறுமி படாத பட்டு பணத்தை ஏற்பாடு செய்து ஆன்லைனில் அனுப்பி உள்ளார்.காதலனிடம் இருந்து வீசா வரும், மருத்துவராகி விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சிறுமிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்திருக்கிறார் சிறுமியின் தாய்.அப்போது தான் நடந்த அனைத்தும் ஒரு மோசடி வேலை என்று தெரிந்திருக்கிறது. உடனே சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் சேட்டிங் ஆதாரங்களுடன் புகார் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குய் பதிவு செய்த போலீசார், விமான நிலையத்தில் பணம் கொடுத்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தோஷின் இருப்பிடத்தை கண்டறிந்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளியான சந்தோஷிடம் விசாரனை நடத்தி,அவரது வீட்டில் இருந்து,இரண்டு கணினி, இரண்டு செல்போன்கள்,10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், தங்க நகைகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பாஸ்போர்ட் போன்றவற்றை மீட்டுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜாரக உத்தரவு வந்ததால், அவர் காவல் நிலையத்தில் தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.

கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை வைத்து இளம்பெண்ணை ஏமாற்றியது சந்தோஷா?அல்லது வேறு நபரா என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்