நேரே நலம் விசாரிக்க சென்ற மோடி.. சோனியா கேட்ட சுளீர் கேள்வி - நாடாளுமன்றத்தில் ஆடிப்போன பிரதமர்

x

மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் வரிசைக்கு சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கூட்டத்தொடர் நடைபெறும் போது மரபுகளின்படி சோனியா காந்தி உட்பட அனைத்து தலைவர்களிடமும் உடல் நலம் குறித்து பிரதமர் விசாரித்ததாக குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்த‌தாகவும், அதற்கு, இந்த விவகாரம் குறித்து பார்க்கிறேன் என்று மோடி பதிலளித்தகாகவும் கூறினார். அதற்கு, இரண்டாவது முறையாக அதே கோரிக்கையை பிரதமர் மோடியிடம் சோனியா காந்தி வலியுறுத்தியதாக ஆதிர்சஞ்சன் சுவுத்ரி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்