மோடி Vs INDIA - காங்கிரஸ் எடுத்த பிரம்மாஸ்திரம்..! பாஜகவுக்கு க்ளைமாக்ஸ் - பெங்களூரு வைத்த செக்

x

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவை ஓவர் டேக் செய்யும் வகையில் அமைந்த பெங்களூரு கூட்டம் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் அவகாசம் இருந்தாலும், தேர்தலுக்கான வியூக அமைப்பில் இப்போதே ஆர்வம் காட்டுகின்றன அரசியல் கட்சிகள்... இதில் எதிர்க்கட்சிகள் தரப்பு நகர்வு விறுவிறுப்பாக காணப்படுகிறது.

2 தேர்தல்களில் மூன்றாவது அணி, தனித்தனியாக போட்டியென களமிறங்கியதில் பின்னடைவை சந்தித்த கட்சிகள்... இப்போது பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்கொள்வோம் என்பதில் உறுதியாக முன்வந்துள்ளன.

இந்த காட்சிகளை பார்க்கும் அரசியல் பார்வையாளர்கள்... தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரசை ஒரு பொருட்டாக எடுக்காத கட்சிகள் இன்று காங்கிரஸ் இல்லையெனில், பாஜகவை எதிர்க்கொள்வது அத்தனை எளிதானது இல்லையென அக்கட்சியுடன் கைக்கோர்க்க முன்வந்ததே முக்கிய நகர்வு என பார்க்கிறார்கள்...

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு என நிதிஷ்குமார் எடுத்த முன்னெடுப்புக்கு மம்தா கொடுத்த சப்போர்ட் தனிக்கவனம் பெற்றது.

இப்படியாக பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், ஆதித்ய தாக்கரே, என முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இதில் டெல்லி நிர்வாக சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையிலான வேறுபாட்டை மம்தா களைய எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதில் முக்கிய நகர்வாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சோனியா காந்தி கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு வந்த தலைவர்களை கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கூடிய கூட்டம் பாட்னா கூட்டத்தை ஓவர் டேக் செய்யும் வகையில் அமைந்திருந்தது. கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, சரத் பவார், மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சித்தாராம் யெச்சூரி, டி.ராஜா, மெகபூபா முப்தி, வைகோ, என பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

பெங்களூரு கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். காங்கிரசுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை என காங்கிரஸ் பேசியிருப்பதும் கூட்டத்தில் கவனம் பெற்றிருக்கிறது. பெங்களூரு கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

பாட்னா கூட்டத்தையும், பெங்களூரு கூட்டத்தையும் உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள், பெங்களூரு கூட்டம் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகவே உள்ளது என்கிறார்கள்.

பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகளின் 3 வது ஆலோசனை கூட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏர்படுத்தியுள்ள நிலையில், பாட்னா கூட்டத்தை பரிகாசம் செய்த பாஜக தலைவர்களை, பெங்களூரு கூட்டம் கொஞ்சம் அப்செட் ஆக்கியிருக்கும் என்றே கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


Next Story

மேலும் செய்திகள்