"மாதிரி பள்ளிகள் தேர்வை ஏற்க முடியாது" - ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு

x

தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளுக்கு நடைபெற்ற தேர்வு, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை ஏற்க முடியாது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிவிட்டு, மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்