நாம பயந்த மாதிரியே வந்திருச்சிப்பா... வந்திருச்சி... - உருவானது மோக்கா புயல்...

x

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது. இந்த புயலுக்கு மொக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகியிருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்