கணவர்களே உஷார்.. குடும்பத்தைப் பிரிக்கும் ஸ்மார்ட் போன் | வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

அதீத ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு, திருமண உறவுகளை பாதிப்பதாக 88 சதவீத இந்தியர்கள் கருதுவதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேடா விலை வெகுவாக சரிந்துள்ளதால், ஸ்மார்போன்கள் பயன்பாடு இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 80 கோடி இந்தியர்கள் ஸ்மார்போன்களை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றனர். கணவன் மனைவியிடையே உள்ள உறவுகளை, அதீத ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு பாதிப்பதாக 88 சதவீதம் பேர் கூறியுள்ளதாக சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இணையருன் இருக்கும் போது, 67 சதவீதத்தினர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதனால், இணையருடன் உரையாடும் நேரம் குறைந்து விட்டதாக 89 சதவீதத்தினர் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். தினமும் சராசரியாக 4.7 மணி நேரத்திற்கு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்