பேருந்தை ஓட்டிய எம்.எல்.ஏ."அண்ணன் வண்டி வருது, விலகு... விலகு..." தொண்டர்கள் கோஷத்தால் சிரிப்பலை

x

பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பரமக்குடி பேருந்து நிலையத்தில் நடந்த விழாவில் புதிய பேருந்து சேவையை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் ஏறிய எம்.எல்.ஏ. முருகேசன் சிறிது தூரம் பேருந்தை ஓட்டினார்.

நயினார்கோவில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எம்எல்ஏ முருகேசன் பேருந்தை ஒட்டிய போது' ஏய் அண்ணன் வண்டி வருது, விலகு விலகு' என தொண்டர்கள் கோஷமிட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்