அமைச்சர் உதயநிதிக்கு மறைமுகமாக துணை முதல்வர் பதவி தர கோரிக்கை..!
அமைச்சர் உதயநிதி ஓரிரு துறையுடன் நின்று விடாமல் அனைத்து துறைகளிலும் முதலமைச்சருக்கு துணை நின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மறைமுகமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரக்கோரி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் பிரபாகரன், என்று நான் அவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாக பலரும் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருவதாக கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின், உழைப்பு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது என கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் முதல்வரின் துணை நின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Next Story