"எளியமுறையில என் பிறந்த நாளை கொண்டாடுங்க" திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
- ஏழை - எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி, எளிய முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடுமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த தினம் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாட உள்ளது.
- இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுகவுக்கும், தமிழகத்திற்கும் தனது தொண்டினை தொடர்ந்து செய்வேன் என உறுதி அளித்துள்ளார்.
- மேலும் தனது சக்திக்கு மீறி உழைப்பதில் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவதை தொண்டர்கள் அறவே தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மேலும், தனது பிறந்தநாள் அன்று ஏழை - எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கி பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்..
Next Story