சிறையில் அடைக்கபட்ட சில நொடிகளில் கைதிக்கு ஏற்பட்ட விபரீதம் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் 72 கிலோ குட்கா வைத்துள்ளதாக கைது செய்யப்பட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்டார் சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறைத்துறை நிர்வாகம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சின்னதுரை உயிரிழந்தார்

ஏற்கனவே சின்னதுரைக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தான் அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நிலையில் சின்னதுரையின் இறப்பில் மருமவிருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழுமி இருந்ததே தொடர்ந்து நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உறவினர்கள் ஐந்து பேரிடம் தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்