சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு விவகாரம் - எம்பி கேள்விக்கு அமைச்சரின் அதிர்ச்சி பதில்!
சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி
சு. வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். அதில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 14 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து சு.வெங்கடேசன், அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story