அமைச்சரின் பாதுகாப்பு ஆய்வாளர் விபத்தில் உயிரிழப்பு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அத்தாம்பட்டி சேர்ந்தவர் நல்லுசாமி. இவர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியின் பாதுகாப்பு காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர். நேற்று தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது நின்றிருந்த ஆட்டோவின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த காவல் சார்பு ஆய்வாளருக்கு அரசு மரியாதை உடன் குண்டுகள் முழங்க ஒட்டன்சத்திரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கத்தில் அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டனர்.
Next Story