"அமைச்சர்கள் KN நேரு, எ.வ.வேலு, துரைமுருகன்" - லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை

x

ஈரோட்டில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் சாதனைகளை விளக்கினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து ஊழல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால், திமுக அமைச்சரவை முழுவதும் வெளியேதான் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, துரைமுருகன் ஆகியோர் டாஸ்மாக் துறை கிடைக்கும் என இலவு காத்த கிளி போல காத்திருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்