"பாஜக என்றாலே ஆடியோ, வீடியோ கட்சி.." - அமைச்சர் உதயநிதி விமர்சனம்

x
  • பாஜக என்றாலே ஆடியோ - வீடியோ கட்சி என்றும், அதில் இருந்தவர்களே 420 கட்சி என கூறி, வெளியேறி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விழி காணும் நிழற்படம் வரலாற்றின் வழித்தடம் எனும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பொய் செய்தி என்றார். பாஜக என்றாலே ஆடியோ - வீடியோ காட்சி தான் என கூறிய அவர், கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் என புகார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்