யினார் நாகேந்திரன் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி கொடுத்த பதில்

x

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு பழைய ஹாக்கி டர்ஃப் (Hockey turf) அனுப்பி வைக்கப்பட்டது குறித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், Hockey Turf வேண்டுமென, விளையாட்டு வீரர்கள் அதிகமுள்ள பாளையங்கோட்டையில் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதனால் சென்னையிலிருந்த Hockey Turf-ஐ பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க வேண்டுமெனில், நான்கு கோடி ரூபாய் வரை செலவாகும் என குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மூன்று கோடி ரூபாய் வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்