கர்நாடகா பொது நிகழ்வில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் சோமன்னா

x

கர்நாடகா பொது நிகழ்வில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் சோமன்னா | Karnataka | Minister | Video

நிலப்பட்டா தொடர்பாக முறையிட்ட பெண்ணை, கன்னத்தில் அமைச்சர் அறைந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின், ஹங்காலா கிராமத்தில் அரசு சார்பில் நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன்னா பங்கேற்றார். அப்பொழுது அமைச்சருக்கு அருகில் வந்த பெண் ஒருவர், தனக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என கோபமுடன் முறையிட்டார். அதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் எதிரே நின்ற அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் அறைந்தார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் அடுத்த நொடியே, அமைச்சரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்