அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா விவகாரம்.. ஆளுநருக்கு முதல்வரின் அதிகாரம் என்ன என்பதை காட்டிய CM ஸ்டாலின்..!
செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் விவகாரத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். அதேசமயம் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.