அமைச்சர் செந்தில்பாலாஜி தீர்ப்பு.. ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு கருத்து - இன்று உச்ச நீதிமன்றத்தில்..

x

செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அவரது நீதிமன்ற காவலை தீர்மானிக்க, வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வுக்கு பரிந்துரைத்தார்.

இதை தலைமை நீதிபதி ஏற்று ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தான் அளித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதால், இந்த வழக்கில் சொல்வதற்கு ஏதுமில்லை என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பும், வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு செந்தில்பாலாஜி தரப்பும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி காவல் குறித்து தீர்மானிக்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறி, மேகலாவின் மனுவை முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், செந்தில்பாலாஜி கைது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள், இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்