ஈபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி
எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் வணிக வளாகங்களில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரும், தன் இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக திரு.பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என அவர் கூறியுள்ளார்
Next Story