கடலில் காற்றாலை திட்டம் வருவது எப்போது? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
கடலில் காற்றாலை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வெளிநாடு சென்றதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் "பொக்கிஷம்" திட்டத்தை கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, கடலில் காற்றாலை நிறுவப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்ய வெளிநாடு சென்றதாகவும், தமிழகத்தில் இத்திட்டம் கொண்டு வர நிறைய காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
Next Story