அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்.. அவதூறு பரப்பிய அதிமுக முக்கிய நிர்வாகி ஈரோட்டில் கைது

x

ஈரோடு அருகே முதல்வர் ஸ்டாலின் குறித்து மீம்ஸ் வீடியோ பதிவிட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக, மொடக்குறிச்சியை சேர்ந்த கௌதம் என்ற அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கௌதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது காவல்துறையை கண்டித்து அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்