முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்
- சென்னை- பினாங்கு நேரடி விமான சேவை... முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்.
- இதுதொடர்பாக, கடந்த மாதம் 11-ஆம் தேதி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
- அதில், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பயன்படுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், முன்னுரிமை அடிப்படையில் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
- அந்த கடிதத்தை பரிசீலித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்கத் தேவையான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Next Story