அமைச்சர் பொன்முடி சென்ற கார் பைக் மீது மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயம்

x

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு காரில் விழுப்புரம் புறப்பட்டார். கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக அமைச்சர் பொன்முடியின் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நடுவீரப்பட்டை சேர்ந்த ஜோதி என்ற தொழிலாளி, தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். மேலும் ஒருவர் காயம் இன்றி தப்பினார். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார், படுகாயமடைந்த ஜோதியை மீட்டு போலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்