பதவி பறிக்கப்பட்டதால் கூட்டத்தை புறக்கணித்து கிளம்பிய அமைச்சர் நாசர்
தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், திருவேற்காட்டில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து, சென்னீர்குப்பம் பகுதியில் நடந்த திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க சென்ற போது, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதனால், பொதுக்கூட்ட மேடையில் ஏறாமல் அப்படியே காரில் வேகமாக கிளம்பி சென்றார்.
Next Story