அமைச்சர் முத்துசாமியின் அதிரடி அறிவிப்பு.. குஷியில் மதுப்பிரியர்கள்

x

டாஸ்மாக் மதுக் கடைகளில், பில் வழங்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, டாஸ்மாக் விற்பனையை கணினி மயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுத்துறை நிறுவனமான ரெயில் டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம், ரூ.294 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலமாக, மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்