"எல்லாம் ஏமாத்து வேலை.. நான் சும்மா விட மாட்டேன்.." - அதிகாரிகளிடம் சீறிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் கீரன் குளத்தின் கரை சரிசெய்து நடைபாதை அமைக்கும் பணி திட்டம் திருப்தியாக இல்லாததால் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிகாரிகளை கடுமையாக சாடினார்...
ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டம் குறித்து அதிகாரிகள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் ஆவேசமாக திட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ், தனது உதவியாளர்களிடம் உடனடியாக மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்...
தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலரை அழைத்து இது குறித்து கேட்டபோது அவர் அளித்த பதிலும் திருப்தியாக இல்லாததால் அமைச்சரிடம் பேசுவதை தெளிவாக பேச வேண்டும் என்று குற்றம் சாட்டினார்...
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story