ஒரு காரையே தூக்கி நடந்த இளைஞர்.. வியந்து பார்த்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
நாகர்கோயிலில் 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிக்கொண்டு, 25 மீட்டர் தூரம் நடந்து இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் கண்ணன். இவர் நாகர்கோயிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிகொண்டு 25 மீட்டர் தூரம் நடந்து சாதனை படைத்துள்ளார். அடுத்து ரயில் என்ஜினை இழுக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ள கண்ணன், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story