"அவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை" - மீம்ஸ் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
எதிர்கட்சியினர் மீம்ஸ் போடத்தான் செய்வார்கள் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். சென்னை ஒட்டேரியில் உள்ள திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மழை நீர் தேங்காத வண்ணம் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் பணியின் போது எல்லோரும் பாராட்டுவார்கள் என்று நினைக்க முடியாது என்றும், அவர்களுத்து பதில் சொல்லாமல், மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
Next Story