4 நாள்..தினமும் 12 மணி நேர வேலை..3 நாள் விடுமுறை.. விளக்கமளித்த அமைச்சர்கள்..எதிர்க்கும் கட்சிகள்
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான தொழிற்சாலைகள் சட்ட மசோதா தாக்கல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன், தொழிலாளர்கள் சுய விருப்பப்படியே வேலை நேரத்தை தேர்வு செய்யலாம் என்றனர்
Next Story