நிர்வாண கோலத்தில் நள்ளிரவு கொள்ளை... கைது செய்யப்படுவார்களா டவுசர் பாய்ஸ்...

x

நட்ட நடு ராத்திரியில அரை நிர்வாணத்தோட திரியுற இந்த ஜிம் பாய்ஸ்ஸா பார்த்த சிலருக்கு தப்பா நினைக்க தோணும். உண்மையில இது ஆபாச கூட்டம் இல்ல கொள்ளை கூட்டம்.இவங்க எல்லாரும் தீரன் படத்துல வர்ற திருட்டு கும்பல மாதிரி ராத்திரி நேரங்கள்ல வேட்டையாட கிளம்பிடுவாங்க. ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்குற பல்லடம் சின்னையா கார்டன் பகுதி தான் இவங்க வாடிக்கையா கொள்ளையடிக்குற இடம் கடந்த ஒரு வருசமாவே இந்த பகுதிய டார்கட் பண்ணி திருட்டுல ஈடுபட்டுட்டு வர டவுசர் கும்பல பார்த்து இந்த பகுதி மக்கள் பயங்கற பீதியோட இருக்காங்க. பலமுறை போலிஸ்ல புகார் குடுத்தும் எந்த ஒரு புரோஜனமும் இல்ல. பல்லடம் சின்னையா கார்டன்ல என்ன நடக்குது? நடு நிசியில நுழையிற அந்த நிர்வான கொள்ளையர்கள் யாரு? ஒரு வருசமா தூக்கத்த தொலைச்சி தவிக்குற மக்கள்கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிச்சோம்.

சரியா ஒரு வருசத்துக்கு முன்னாடி தான் இந்த திருட்டு கும்பல முதல் தடவையா அடையாளம் கண்டிருக்காரு முருகேசன்.

முருகேசன் வீட்லயிருந்து வெற்றிகரமா பயணத்த தொடங்குன அந்த கொள்ளை கூட்டம் சென்செக்ஸ் எடுக்குற மாதிரி வரிசையா பல வீடுகள்லயும் கைவச்சியிருக்காங்க.

இது திருட்டு தொடர்பா போலிஸ்ல பல முறை கம்பிளைன்ட் குடுத்தும் மாசம் மாசம் கிரைம் ரேட்தான் கூடிக்கிட்டே போகுதே தவிர நிர்வாண கொள்ளையர்கள புடிச்சபாடில்ல.

ஒரு கட்டதுல போலிஸ்ஸ மட்டுமே நம்பிட்டு இருந்தா அந்த திருட்டு கூட்டம் கோவனத்த கூட விட்டு வைக்காதுன்னு முழிச்சிக்கிட்ட ஊர்காரங்க.

ராத்திரியெல்லாம் கண்முழிச்சி ஒட்டு மொத்த ஊரையே காவல் காத்திருக்காங்க. அப்படியிருந்தும் அந்த நிர்வாண கொள்ளையர்களை புடிக்க முடியல. மக்கள் எவ்ளோ முயற்சி பண்ணியும் அவங்கள புடிக்க முடியாததுக்கு காரணம் பல்லடத்தோட ப்ளு பிரிண்ட் அந்த கொள்ள கூட்டத்துக்கிட்ட இருந்திருக்கு. அதோட ஊருக்குள்ள ஒரு இன்ஃபார்மர் அந்த கும்பலுக்கு பக்கபலமா இருக்கிறதா சொல்றாங்க. நிர்வாண கொள்ளையர்கள் செல்போன் மாதிரி எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தாததும், டிரஸ்ஸே போடாம அலையுறதும் கொள்ளையர்கள அடையாளம் காட்டுறத கடினமாக்கியிருக்கு. இவ்வளோ சின்ன ஊருள்ள அடையாளம் தெரியாத நபர் எப்படி வந்து போறாங்கன்னு விசாரிச்சப்போ, அதுக்கு காரணம் இங்க இருக்குற பூங்கா தான்னு சொல்றாங்க..ஊர்ல பல இடங்கள்லயும் இப்ப கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்கு. போதாத குறைக்கு மக்களும், போலீஸும் கண்கொத்தி பம்பா அந்த கொள்ளை கூட்டத்த புடிக்க காத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா அந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் சிக்குவாங்களாங்குறது தான் மிகப்பெரிய கேள்வி.


Next Story

மேலும் செய்திகள்