மிக்கி மவுஸின் 93வது பிறந்தநாள் இன்று..!

மிக்கி மவுஸின் 93வது பிறந்தநாளான இன்று... மிக்கி மவுஸ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
x

இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த கார்டூன் கேரக்டர் தான்... நம்ம மிக்கி மவுஸ்.

குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் முதல்... களைகட்டும் நம்ம ஊர் பொருட்காட்சி வரை

எங்கே திரும்பினாலும்... அங்கே ஒரு மிக்கி மவுஸ் உருவத்தை நம்மால் பார்க்க முடியும்..!

பேன்ஸி டிரஸ் காம்பெட்டிஷன் என்றால் அங்கேயும் ஒரு மிக்கி மவுஸ் கண்டிப்பாக இருப்பார்... மிக்கி மவுஸால் ஈர்க்கப்படாமல் குழந்தை பருவத்தை ஒருவர் நிச்சயம் கடந்திருக்க முடியாது..!

இன்றும் கிப்ட் என்றதும் பலருக்கும் முதலில் ஸ்ட்ரைக்காகும் மிக்கி மவுஸ் தொப்பி.. மிக்கி மவுஸ் உருவம் பொறிக்கப்பட்ட காபி மக்.. பேக்... பொம்மை போன்றவை தான்..!

Black & White காலத்தில் அறிமுகமாகி... நம் தாத்தா பாட்டியின் இதயங்களை கொள்ளை அடித்தது மட்டுமின்றி... நம் தாய் - தந்தைக்கும் ஃபேவரைட்.. நமக்கும் ஃபேவரைட் என்றாகியதோடு...நாளை நமது பிள்ளைகளுக்கும் ஃபேவரைட்டாக இருக்க போகும் மிக்கி மவுஸ் முதன் முதலில் அறிமுகமான நாள் தான் இன்று..!

நமது குழந்தை பருவத்தை கலர்புல்லாக்கிய் வால்ட் டிஸ்னியின் படைப்பு தான்... இந்த மிக்கி மவுஸ். கடந்த 1928 ஆம் ஆண்டு "Steamboat Willy." என்ற the short film மூலம் அறிமுகமான மிக்கி மவுஸ், ஒரு animated கார்டூன் கேரக்டர் தான் என்றாலும்.. பார்த்த மாத்திரத்தில் உதட்டில் புன்னகை பூக்க செய்யும் ஒருவித Positive vibe.

Oswald என்ற முயலுக்கு பதிலாக என்ன கார்டூன் கேரக்டரை அறிமுகம் செய்யலாம் என யோசித்து கொண்டிருந்த வால்ட் டிஸ்னி... மிக்கி மவுஸை அறிமுகம் செய்துள்ளார். முதலில் மிக்கி மவுஸிற்கு Mortimer Mouse என்று தான் அவர் பெயரிட்டுள்ளார். பிறகு மனைவி Lillian கேட்டு கொண்டதன் பெயரில் செய்யப்பட்ட பெயர் மாற்றம் தான்.. இந்த மிக்கி மவுஸ்.

ஊமை படங்களிலேயே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் படங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு... வால்ட் டிஸ்னியால் அவதாரமெடுத்து... தனது மெல்லிய குரலால் நம்மை சிந்தித்து முடிவெடுக்க அறிவுறுத்திய சுட்டி எலியான நம்ம மிக்கி மவுஸின் பிறந்தநாளை நாமும் இன்று கொண்டாடுவோம்.


Next Story

மேலும் செய்திகள்