மெக்சிகோ அதிபருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யுகடன் தீபகற்பத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக நாடு திரும்பினார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், தமக்கு லேசான தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தாம் நலமாக இருப்பதாகவும் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு, குணடைந்த ஆண்ட்ரெசுக்கு, கடந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது, அவர் மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.