"வெப்ப அலைகளால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு" வானிலை மையம் எச்சரிக்கை
கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் இனி தயாராக இருக்க வேண்டும் என உலக வானிலை அமைப்பின் வெப்ப ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
கனடா, கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இனி கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக வானிலை அமைப்பின் வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இரவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர் அதிர்ச்சியூட்டி உள்ளார். அதேசமயம், வெப்ப அலைகளை கட்டுப்படுத்த கார்பன் எரிபொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றும் ஜான் நேர்ன் அறிவுறுத்தி உள்ளார்..