"மாஞ்சோலையில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவிடம்"... நயினார் நாகேந்திரன் ஆவேசம்

x

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நெல்லை தாமிரபரணி ஆற்றில், தமிழக அரசு நினைவிடம் அமைக்க வேண்டுமென, பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றில் 17 தொழிலாளர்கள் மூழ்கிய சம்பவத்தின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நயினார் நாகேந்திரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், உயர்நீத்தவர்களுக்கு தமிழக அரசு தாமிரபரணி ஆற்றில் நினைவிடம் அமைக்காவிட்டால், பா.ஜ.க சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்