விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
விலைவாசி உயர்வு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதித்தில் பேசிய நிர்மலா சீதாராமான், நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாகுறையின் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் 6.4 சதவீதமாக குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சில்லரை விலைவாசி உயர்வு விகிதம் நவம்பரில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளதையும், மொத்த விலைவாசி உயர்வு 5.9 சதவீதமாக குறைந்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த 21 மாதங்கள் இது தான் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது. விலைவாசி உயர்வுடன் கூடிய பொருளாதார மந்தத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளதிரி கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்றார். அதே சமயத்தில் விலைவாசி உயர்வு விகிதமும் குறைந்துள்ளது என்றார்