“சொல்லாம எப்படி வருவீங்க?" துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மிரட்டல் விடுத்த வார்டு கவுன்சிலர்
மயிலாடுதுறை அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக வார்டு கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தரங்கம்பாடி அருகே செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசூர் கிராமத்தில் வீடு கட்டும் பணிகள் குறித்த கணக்கெடுப்பை ஆய்வு செய்ய சக ஊழியர்களுடன் சென்றார்.
அப்போது திமுக வார்டு உறுப்பினர் செல்வேந்திரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன் என இருவரும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது வார்டு உறுப்பினரான தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் கணக்கெடுக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்தது ஏன்? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.