9,125 கார்களை திரும்பப் பெறும் மாருதி சுஸூக்கி

x

நவம்பர் 2 முதல் 20 வரை தயாரிக்கப்பட்ட சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்.எல். 6, கிராண்ட் விடாரா ரக மாருதி கார்களின் முன் சீட் பெல்டுகளில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய, 9 ஆயிரத்து 125 கார்களை திரும்பப் பெற உள்ளதாக மாருதி சுஸூகி அறிவித்துள்ளது. சீட் பெல்டுகளை அங்கீகரிக்கப்பட்ட பணி மனைகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று சம்பதப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் மாருதி சுஸூக்கி நிறுவனம், இத்துடன் நான்காவது முறையாக கார்களை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், நவம்பரில் மாருதி சுஸூக்கி கார்கள் விற்பனை 1.59 லட்சமாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்