நாளை மறுநாள் திருமணம்..குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுத்த மணமகன்

x

அந்தியூர் அருகே உள்ள ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி என்பவருக்கு திங்கட்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. குடும்பத்தினர் திருமண வேலைகளை பார்த்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேசவமூர்த்தி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, திருமணம் நடைபெற இருந்த பெண்ணிடம் கேசவமூரத்தி மதுபோதையில் பேசியதாகவும், அதனை அந்தப் பெண் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், விரக்தியில் கேசவமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்