"இதை எல்லாம் குறிச்சி வச்சிக்கோங்க.." - பெரிய குண்டாக தூக்கி போட்ட மோடி.. சைலண்ட் மோடில் KCR.. பரபரக்கும் தெலங்கானா

x

தெலங்கானாவில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடி, "ஆளும் சந்திரசேகர ராவின் அரசு தான் மிகப்பெரிய ஊழல் அரசு" என்று கடுமையாக விமர்சித்தார். இது குறித்த விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

தெலங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, இன்று தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லுக்கு சென்றார்.

முதலில், அங்குள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். அங்கு அவருக்கு நாதஸ்வரம் மத்தளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, காஸிபட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள ரயில் உற்பத்தி மையம், 5500 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள 176 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை திட்டம் உட்பட 6100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய கலாச்சார அமைச்சர் கிஷண் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய, பிரதமர் மோடி "தெலுங்கு மக்களின் வலிமை, எப்போதும் இந்தியாவின் வலிமையை அதிகரித்திருப்பதாகவும், உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும் இந்த வேளையில், அதில்

தெலங்கானா மக்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும்" குறிப்பிட்டார்.

"இன்றைய புதிய இந்தியா முழுமையான ஆற்றல் நிரம்பிய இளைய இந்தியா'' என குறிப்பிட்ட பிரதமர், இந்த பொன்னான தருணத்தில் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதோடு, நாட்டின் எந்த ஒரு பகுதியும் துரித வளர்ச்சியின் சாத்தியக் கூறுகள் இன்றி விடுபட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்த பிரதமர், அதில் வளர்ச்சியடையவும் முன்னேற்றவும் தெலங்கானாவின் முன்பு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் அவதூறு செய்வது, தெலங்கானாவை ஊழலுக்குள் தள்ளியது, உள்ளிட்ட நான்கு விஷயங்களை தற்போதைய தெலங்கானா அரசு செய்து வருவதாக தெரிவித்த பிரதமர், "தெலங்கானாவில் ஊழல் இல்லாத திட்டங்களே இல்லை" எனவும், சந்திரசேகர ராவின் அரசுதான் மிகப்பெரிய ஊழல் அரசு என குறிப்பிட்டார்.

சந்திரசேகர ராவின் ஊழல் தற்போது டெல்லிக்கும் பரவி விட்டதாக குற்றம் சாட்டிய பிரதமர், "வாரிசு அரசியலை வழிநடத்தும் அரசியல் கட்சிகள் அனைத்தும், ஊழலை அடிப்படையாகக் கொண்டவை என்பதை, தெலங்கானா மக்கள் குறித்துக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்