கோவையில் ஒரு வாரமாக கிலோ கிலோவாக தங்க நகைகளை விற்கும் பல பெற்றோர்கள்.. ஏன்? ஓர் உருக்கமான பின்னணி

x

கல்வி... பிறருக்கு கொடுக்க கொடுக்க குன்றாத பெரும் செல்வம்...

ஆனால் அந்த செல்வத்தை பெற வேண்டும் என்றால் கோடிகளை கொட்டிதான் ஆக வேண்டும் என்ற சூழல் இருக்கிறது.

கல்வி லாபம் ஈட்டும் தொழில் அல்ல என உச்சநீதிமன்றமே கடிந்து கொண்டாலும், லட்சங்கள் இல்லாது பல கல்வி நிலையங்களில் காலடி வைக்க முடியாது என்ற சூழலே நிலவுகிறது.

இந்த சூழலில் இருப்பதை கொடுத்து குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பது ஏழைகளுக்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. இப்போது பிளஸ் 2 தேர்வு வெளியான நிலையில், குழந்தைகளை கல்லூரிகளில் சேர்க்க தங்கள் கையிலிருக்கும் நகைகளை விற்க நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கிறார்கள் பெற்றோர்கள்...

தங்க நகைகளை விற்ற பெற்றோர்கள் பலரும், குழந்தைகள் ஊரிலேயே நல்ல கல்லூரிகளில் படிக்க விரும்புகிறார்கள், அங்கு சேர்க்க வேண்டும் என்றால் கல்வி கட்டணம் அதிகமாகவே உள்ளது என்கிறார்கள்.

கல்வி கடன் வாங்கலாமே என்றால்...? அதுவும் கசப்பான அனுபவமாகவே இருக்கிறது என்கிறார்கள். படித்து முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால் பரவாயில்லை, வேலையில்லை என்றாலும், நல்ல சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் வட்டிக்கு மேல் வட்டியாக குவிகிறது என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்