5 வருடத்திற்கு பின் நிரம்பிய மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கம்

x

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கம் கடந்த 5 வருடங்களுக்கு பிறகு முழுக் கொள்ளவானா 36 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதேபோல் மண் அணையின் நீர்மட்டமும் தற்போது 31 அடியை எட்டியுள்ளது. இரண்டு குடிநீர் தேக்கங்களும் முழுமையாக நிரம்பி உள்ளதால், 2 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், நாள்தோறும் குடிநீர் தடையின்றி வினியோகம் செய்யப்படும் எனவும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்