மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து தமிமுன் அன்சாரி இடைநீக்கம் - புதிய பொதுச் செயலாளர் அறிவிப்பு
- கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அதில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரியை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இதுதவிர, வட மாநிலத்தவரின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தத் கோரியும், பிபிசி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை நடத்த உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story